“அவர், எல்லா நேரங்களிலும்…. பஹாவுல்லாவின் ஈடிணையற்ற அனனத்தும் அடங்கிய ஒப்பந்தத்தின் மைய அச்சாகவும், அவரது அதிமேன்மைமிக்க கைவண்ணமாகவும், அவரது ஒளியின் கறையில்லா பிரதிபலிப்பாகவும், அவரது வார்த்தையின் பிழையில்லா விளக்கவுரையாளராகவும், ஒவ்வொரு பஹாய் குறிக்கோளின் கருத்துருவாகவும், ஒவ்வொரு பஹாய் பண்புகளின் பண்புருவமாகவும்,….. மனிதகுல ஒருமைப்பாட்டின் ஊக்கசக்தியாகவும், கருதப்படவேண்டும்….”



ஷோகி எஃபெண்டி

20ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் அப்துல் பஹா—பஹாவுல்லாவின் மூத்த மகன்—பஹாய் சமயத்தின் தலைசிறந்த அறிவுரையாளராகவும், சமூக நீதிக்கான ஓர் வெற்றியாளராகவும் மற்றும் அமைதிக்கான தூதுவராகவும் அறியப்பெற்றார்.

பஹாவுல்லாவின் போதனைகளின் அடிப்படை கொள்கையான ஒற்றுமையை பாதுகாப்பதில், அவர் பிற சமயத் தலைவர்கள் மறைந்தபின் பிரிவுற்றதுபோல் தனது சமயமும் அதே விதிக்கு என்றுமே ஆளாகக்கூடாது என்பதை உறுதிசெய்வதற்கு தேவையான தடுப்புமுறைகளை ஏற்படுத்தியுள்ளார். அவரது வாசகங்களில், அப்துல் பஹா பஹாய் எழுத்துக்களின் அதிகாரப்பூர்வ விளக்கவுரையாளர் என்பதால் மட்டுமல்லாமல், அவர் சமயத்தின் சாரம் மற்றும் போதனைகளின் பரிபூரண உதாரணராகவும் இருப்பதால் அனைவரும் தனது மூத்த மகனான, அப்துல் பஹாவின்பால் திரும்பவேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்கு பின், அப்துல் பஹாவின் அசாதாரண குணவியல்புகள், அவரது அறிவு மற்றும் மனித இனத்திற்கு அவர் ஆற்றிய சேவை ஆகியவை பஹாவுல்லவின் போதனைகளுக்குறிய சிறந்த செயல் எடுத்துக்காட்டாகவும் மற்றும் உலகம் முழுவதும் துரிதமாக விரிவடைந்துவரும் சமூகத்திற்கு சிறந்த மதிப்பினையும் பெற்றுத்தந்தது.

அப்துல் பஹா தனது ஆட்சிகாலத்தை தனது தந்தையின் சமயத்தை முன்னேற்றமடையச் செய்வதற்கும் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான கருத்துருவங்களை மேம்படுத்துவதற்கும் அர்பணித்தார். அவர் உள்ளூர் அளவில் பஹாய் நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு ஊக்கப்படுத்தினார், ஆரம்ப நிலையில் உள்ள கல்வியளிப்பு, சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு வழிகாட்டினார். அவரது ஆயுள்கால சிறைவாசத்திலிருந்து விடுதலை பெற்றபின் அப்துல் பஹா ஓர் பயண வரிசையினை திட்டமிட்டார். அது அவரை எகிப்து, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கொண்டுசென்றது. அவரது வாழ்நாள் முழுவதும் ஆன்மீக மற்றும் சமூக மறுசீரமைப்புக்குரிய பஹாவுல்லாவின் அறிவுரையான, மிகச்சிறந்த எளிமையினை, அவர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என பாராமல் வெளிப்படுத்தினார்.

Exploring this topic:

The Life of ‘Abdu’l-Bahá

The Significance of ‘Abdu’l-Bahá

The Development of the Bahá’í Community in the time of ‘Abdu’l-Bahá

Quotations

Articles and Resources