உலக நீதி மன்றம்



பாப்

19ம் நூற்றாண்டின் மத்தியில்—உலக வரலாற்றில் ஓர் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்தில்-- இளைய வணிகர் ஒருவர் மனிதகுலத்தின் ஆன்மீக வாழ்வினை மாற்றுவதற்கென விதிக்கப்பட்ட செய்தியை தாங்கி வந்திருப்பவர் தாமே என அறிவித்தார். அவரது நாடான ஈரானில், அறமுறையான சீர்கேட்டினை கொண்டிருந்த அந்த நேரத்தில், அவரது செய்தி அங்கிருந்த அனைத்து தரப்பினரிடையேயும், உணர்வூக்கத்தையும் நம்பிக்கையையும் எழச்செய்தது, அதிவிரைவில் ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களை ஈர்த்தது. அவர் அரபியில் “வாயில்” என்ற பொருள் கொண்ட “பாப்” எனும் பெயரினை பெற்றார்.

ஆன்மீக மற்றும் தார்மீக மறுஉருவாக்கத்திற்கான அவரது அழைப்பு, பெண்களின் நிலை மற்றும் வறுமையானவர்களின் விதியினை முன்னேற்றுவதற்கான அவரது கவனம், ஆன்மீக மறுசீரமைப்பிற்கான புரட்சிகரமாக இருந்தது. அதே நேரத்தில், அவர் தனித்துவமான, தன்னிச்சையான சமயத்தை நிறுவி, அவரது நம்பிக்கையாளர்கள் தங்களது வாழ்வினை உருமாற்றுவதற்கும் மற்றும் வீரதீரமிக்க சிறந்த செயல்களை மேற்கொள்ளவும் அவர்களை எழுச்சியூட்டினார்.

மனிதகுலமானது ஓர் புதிய யுகத்தின் தலைவாயிலில் நிற்கின்றது என பாப் அவர்கள் அறிவித்தார். அவரது தூதுப்பணியானது ஆறு வருட காலம் மட்டுமே இருந்து அனைத்து உலக சமயங்களிலும் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள அமைதி மற்றும் நீதிக்கான ஓர் பருவத்தினை வழிநடத்தக்கூடிய கடவுளது திருவெளிப்பாடான பஹாவுல்லாவின் வருகைக்கான பாதையினை தயார்படுத்தியது.

Exploring this topic:

The Life of the Báb

The Bábí Movement

The Shrine of the Báb

Quotations

Articles and Resources