"மதிப்பிட முடியாத இரத்தினங்கள் நிறைந்த சுரங்கமாக மனிதனை கருதுங்கள். கல்வி மட்டுமே, அதன் பொக்கிஷங்களை வெளிப்படுத்த செய்து, மனிதகுலம் அதிலிருந்து பயனடைவதை நிச்சயிக்கக் கூடும்."
— பஹாவுல்லா
மனிதனின் மேன்மை குறித்த திடமான நம்பிக்கை காரணமாக, சமுதாயத்தின் சீர்த்திருத்தமானது தனிநபர்களிடம் உள்ளூர இருக்கும் திறனாற்றல்கள் மற்றும் பண்புகளின் முறையான மற்றும் தொடர்ச்சியான பேணுதலை தேவையாக கொண்டிருக்கிறது என்று பஹாய்கள் நம்புகின்றனர். கல்வி மட்டுமே ஒவ்வொரு தனிநபரிடம் இருக்கும் பரந்த திறன்களை சமுதாயத்தின் எழுச்சிக்காக ஒன்றுதிரட்டப்படுவதை அனுமதிக்கும் செயல்முறையாகும். உண்மையான செழிப்பிற்கு பங்களிக்க, கல்வியானது மனித வாழ்வின் ஆன்மீக மற்றும் லௌகீக பரிமாணங்களை கையாள வேண்டும்.
பஹாய்கள் ஈடுபட்டுள்ள சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் மையத்தில் இருப்பது, பொது நலனிற்காக வாழ்நாள் சேவைக்கான தனி நபர்களின் ஆன்மீக மற்றும் அறிவார்ந்த திறனாற்றல்களை நிர்மாணிக்கும் நோக்கத்தை கொண்டிருக்கும் கல்வியளிப்பு திட்டங்களேயாகும்.
குழந்தைகள்
குழந்தைகளுக்கான ஆன்மீக கல்விக்கான வகுப்புகள் பல்வேறு சூழலில் நடைபெறுகின்றன, அதில் ஒரு நபரை ஆன்மீகமாக செழிப்படைய வைக்கும் ஆன்மீக பண்புகளின் முன்னேற்றம், நம்பிக்கைகள், பழக்கங்கள் மற்றும் நடத்தை மாதிரிகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படுகின்றது.
இளம் பருவ வயதினர்
நாடு முழுவதும் உள்ள இளம் பருவ வயதினர், முடிவுகளை எடுப்பதற்கான ஆன்மீக ஞானம் மற்றும் ஒரு தார்மீகக் கட்டமைப்பையும் வளர்க்க உதவும் ஒரு திட்டத்தில் குழுக்களாக பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்கள் சொல்திறனை வளர்த்துக் கொள்வதோடு தமது அபரிமிதமான ஆற்றல்களை தங்கள் சமூகங்களுக்கான சேவைகளாக முறைப்படுத்துகிறார்கள்.
இளைஞர்களும் வயதுவந்தோரும்
ஒரு பரவலாக்கப்பட்ட கல்வி முறையின் மூலம், நாடு முழுவதுமுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களின் அண்டைப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் வயதுவந்தோர் தங்கள் சமூகங்களுக்கு சேவை செய்வதற்கான அறிவுசார், தார்மீக மற்றும் நடைமுறைத் திறன்களை வளர்த்து வருகின்றனர்.