“மனிதனின் மதிப்பு சேவை மற்றும் பண்புகளில் தங்கியுள்ளது அல்லாது செல்வம் மற்றும் சொத்துக்களின் ஆடம்பரத்தில் அல்ல.…”



பஹாவுல்லா

உலகெங்கிலுமுள்ள பஹாய் சமூகத்தால் தொடங்கப்பட்ட பல்வேறு சமூக நிர்மாணிப்பு முயற்சிகளின் மையத்தில் ஒரு துடிப்பான மற்றும் வளமான சமூக வாழ்க்கையை உருவாக்கத் தேவையான பல்வேறு செயல்முறைத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைத் துவங்கிட இளைஞர்கள் மற்றும் வயதுவந்தோரின் திறன்களை உருவாக்கும் ஒரு பரவலாக்கப்பட்ட கல்வி முறை உள்ளது. இந்த கல்வி செயல்முறையானது, ‘படிப்பு வட்டங்கள்‘ என்றழைக்கப்ப்படும் சிறிய, முறைசாரா குழுக்களில் வழங்கப்படுகிறது. கடவுளின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட இந்த படிப்பு வட்டங்களின் பாடத்திட்டம், எல்லா பின்னணியிலிருந்தும் வரும் மக்களின் அறிவுசார், தார்மீக, ஆன்மீக மற்றும் நடைமுறைத் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குழந்தைகளின் ஆன்மீகக் கல்விக்கான வகுப்புகளைக் கற்பித்தல், பக்திக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் பயிற்சி வட்டங்களை பயிற்றுவித்தல் போன்ற பல்வேறு சேவை நடவடிக்கைகளை சமூகத்திற்கு வழங்குவதற்கான திறன்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பயிற்சிகளின் தொடரை அவை கொண்டிருக்கின்றன.

பயிற்சி நிறுவனம் என்றழைக்கப்படும் இந்த செயல்முறையின் ஒரு அங்கமாக வழங்கப்படும் பயிற்சிகளின் தொடரில் முன்னேறுபவர்கள், ஒரு கட்டமைக்கப்பட்ட ஆயினும் நெகிழ்வான சேவையின் பாதை வழி ஒன்றாக சேர்ந்து நடக்கிறார்கள். இந்த செயல்முறையானது கடவுளின் வார்த்தையையும், தமது வாழ்க்கை மற்றும் சமூகத்திற்கான அதன் தாக்கங்களையும் ஆழமாகப் பிரதிபலிப்பதற்காகவும், தங்களின் கற்றலை தங்களின் சமூகத்தை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்காகவும் ஏராளமானோருக்கு வாய்ப்பளிக்கிறது.