அகப்பார்வை மற்றும் புரிந்துணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும் எழுதப்பட்டுள்ளவைகளை மெய்நிலையாக்கவும் செயல்படுத்தவும் முயற்சிக்க வேண்டியது அவசியமாகின்றது... இன்று எவனொருவன், முழு மனித இனத்திற்கான சேவையில் தன்னை அர்பணிக்கின்றானோ அவனே மனிதனாவான்."
— பஹாவுல்லா
ஒரு அண்டைபுரம் அல்லது கிராமத்தில் சமூக நிர்மாணிப்பு செயல்முறை தீவிரமடைகையில், அதில் ஈடுபட்டுள்ள நண்பர்கள் இயற்கையாக அங்கிருக்கும் மக்கள் சந்திக்கும் சமுதாய மற்றும் பொருளாதார விடயங்களில் ஈர்க்கப்படுகின்றனர். பஹாய் சமயத்தின் ஆன்மீக போதனைகளில் இருக்கும் சில உட்பார்வைகள் மற்றும் கொள்கைகளை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்தி கொள்கின்றனர், உதாரணத்திற்கு ஆண் மற்றும் பெண்ணின் சமத்துவத்தை மேம்படுத்துவது, சுற்றுப்புறம், ஆரோக்கியம், விவசாயம் மற்றும் கல்வி. இத்தகைய பிரச்சனைகள் மீதான விழிப்புணர்வு அதிகரிக்கப்படும் போது, பயிற்சி வட்டங்கள், இளைய இளைஞர் குழுக்கள் மற்றும் கூட்டு வழிபாடு ஆகியவற்றில் பங்கேற்றதன் விளைவாக கிடைக்கப்பெற்ற பொதுவான தொலைநோக்கை கொண்ட நண்பர்களின் குழு தங்களின் சமூகத்தின் மேம்பாட்டிற்காக முயற்சிகள் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றனர். முறைப்படுத்தப்படாத முயற்சிகள் மற்றும் சேவை நடவடிக்கைகள் சில நேரங்களில் டுடோரியல் வகுப்புகள் அல்லது சமூக பள்ளிகளாக நிலையான முயற்சிகளாக மாறுகின்றன. இவற்றில் சில மேலும் முறைமை பெற்று பலக்கிய வளர்ச்சி நிறுவனங்களாகவும் பெரிய பள்ளிகளாகவும் மாறியுள்ளன.
முயற்சிகள் எடுக்கப்படும் துறைகள் மற்றும் பலக்கியத்தின் அளவு ஆகியவற்றில் வெவ்வேறாக இருந்தாலும், இத்தகைய சமுதாய நடவடிக்கை முயற்சிகள் பொதுவான தொலைநோக்குகளை கொடுள்ளன, அவை, மானுடத்தின் ஆன்மீக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுவது, மனிதகுல ஒருமை மற்றும் நீதியெனும் கொள்கையின் மீதான நம்பிக்கை, தங்களின் சொந்த சமூகங்களின் முன்னேற்றத்திற்கான அறிவை உருவாக்கி அமுல்படுத்துவதில் பங்கேற்பதற்காக அணைத்து மக்களின் திறனாற்றல்களை நிர்மாணிக்க கவனம் செலுத்துதல், மற்றும் கலந்துரையாடல், படிப்பு, செயல் மற்றும் பிரதிபலிப்பு ஆகிய சுழற்சியின் மூலம் செயலில் இருந்து கற்றுக்கொள்ளும் குணவியல்ப்பை கொண்ட அணுகுமுறை ஆகியவையாகும்.