"நாம் வாழும் காலத்தின் தேவைகளை பற்றி கவனத்துடன் இருங்கள், உங்களுடைய முயற்சிகளை அதன் அவசரத்தின் மீதும் தேவைகள் மீதும் மையப்படுத்துங்கள்."



பஹாவுல்லா

மானுடம் முதிர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது மாற்றமடைய வேண்டிய சமுதாய வாழ்வின் பல அம்சங்களில், மனப்பாங்குகள், சிந்தனைகள், மானுடம் சந்திக்கும் அடைப்படை பிரச்சனைகளை பற்றிய கருத்துருக்கள் ஆகியவையும் அடங்கும். சிந்தனையளவில் இந்த தன்மைமாற்ற செயல்முறைக்கு பங்களிக்க வேண்டியது உலகளாவிய பஹாய் சமூகம் கருதவேண்டிய கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய துறையாகும். பஹாய் சமூகங்கள் மானுடத்தின் நலன் தொடர்பான பல சொல்லாடல்களில் பங்கெடுக்க கற்றுக்கொண்டு வருகின்றனர், ஆண் பெண் சமத்துவம், நல்லிணக்கம், ஆட்சிமுறை, பொது ஆரோக்கியம், வளர்ச்சி போன்றவை சில உதாரணங்களாகும்.

இந்த சொல்லாடல்களில் பங்கெடுப்பது ஒரு தலைப்பை பற்றிய பஹாய் நிலைப்பாட்டை அனைவரையும் ஏற்றுக்கொள்ள செய்யும் நோக்கத்தை கொண்டதல்ல. அதே போல இந்த துறையில் எடுக்கப்படும் முயற்சிகள் பொது உறவுகள் நடவடிக்கையாகவோ அல்லது கல்வி பயிற்சியாகவோ எடுக்கப்படுவதுமில்லை. அதே போல, மானுடம் சந்தித்து வரும் சுற்றுசூழல் மாற்றம், பெண்களின் ஆரோக்கியம், உணவு உற்பத்தி மற்றும் வறுமையை ஒழிப்பது போன்ற பிரச்சனைகளுக்கான குறிப்பான தீர்வுகளை வழங்கவும் மேற்கொள்ள படுவதில்லை. எனினும் உலகில் பல்வேறு சூழல்களில் பஹாய்கள் நாகரீக முன்னேற்றத்திற்காக பஹாவுல்லாவின் போதனைகளை அமுல்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சிகளில் இருந்து கற்றுக்கொண்டவைகளை ஆர்வமுடன் பகிரவும் மற்றும் ஒத்த-எண்ணங்களுடைய தனிநபர்கள் மற்றும் குழுக்களில் இருந்து கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக உள்ளார்கள்.

இந்திய பஹாய் சமூகம் ஆண் பெண் சமத்துவம், சமூக பொருளாதார முன்னேற்றம், சமுதாயத்தில் சமயத்தின் பங்கு, குழந்தை உரிமைகள் மற்றும் இளைஞர் மற்றும் சமுதாய தன்மைமாற்றம் ஆகிய சொல்லாடல்களில் பங்கேற்ற செழுமையான வரலாற்றை கொண்டது.