“இறைவனின் புனித விருப்பமெனும் சுவர்கத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட சமயத்தின் நோக்கம் உலகின் மக்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் இணக்கத்தை ஸ்தாபிப்பதேயாகும்; அதனை பூசல் மற்றும் சச்சரவிற்கான காரணமாக்கி விடாதீர்கள்"


பஹாவுல்லா

சமயம் ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்திய துணைக்கண்டம் பஹாய் வரலாற்றுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தது. துணை கண்டத்திலிருந்து சையத்-இ-ஹிந்தி என்பவர் பாப்(பஹாவுல்லாவின் முன்னறிவிப்பாளரின்) அவர்களின் முதல் சில சீடர்களில் ஒருவராவார். அவரை போலவே பாப் அவர்களின் குறுகிய வாழ்நாளில் அவருடைய தெய்வீக ஸ்தானத்தை இந்தியாவில் பலர் அங்கீகரித்தார்கள். பாப் அவர்களின் அரசாட்சியின் போது, அவரது போதனைகள் எனும் ஒளி இந்தியாவின் பாம்பே(தற்போதைய மும்பை), ஹைதராபாத், ஜாஉன்பூர், ராம்பூர் மற்றும் பாலம்பூர் போன்ற நகரங்கள் மற்றும் கிராமங்களை அடைந்திருந்தது.

பஹாவுல்லாவின் போதனைகள் முதன் முதலில் இந்தியாவிற்கு 1872 ஆம் ஆண்டு, பாரசீக மனிதர், ஜமால் எஃபண்டி அவர்களால் கொண்டு வரப்பட்டது, அவர் துணை கண்டம் முழுவதும் பயணித்து வந்தவராவார். அவருடைய விஜயங்கள் அவரை வடக்கில் ராம்பூர் மற்றும் லக்னோ, கிழக்கில் கல்கட்டா மற்றும் ரங்கூன், மேற்கில் பரோடா மற்றும் மும்பை மற்றும் இறுதியாக தெற்கில் சென்னை மற்றும் கொலம்போ நகரங்களுக்கு அழைத்து சென்றது. அவர் சந்தித்த அனைவருக்கும், நவாப்கள், இளவரசர்கள் மற்றும் ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அவர் பஹாவுல்லாவின் ஒற்றுமை மற்றும் தோழைமைக்கான போதனைகளை அறிமுகப்படுத்தினார். அன்றிருந்த சமூக நெறிமுறைகளுக்கு மாறாக, அவர் அணைத்து சமூகங்கள் மற்றும் பின்னணிகள் - சமூக நிலை, ஜாதி மற்றும் சமய நம்பிக்கை என்று எதையும் பாராமல் அனைவருடன் ஒன்று கலந்தார்.

அந்த நூற்றாண்டின் முடிவில், பாம்பே, டெல்லி, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் சிறிய பஹாய் சமூகங்கள் இருந்தன. 1923 ஆம் ஆண்டு சீராக வளர்ந்து வரும் பஹாய் சமூகங்களின் விவகாரங்களை நிர்வகிக்க துணைக்கண்டத்திற்கான முதல் தேசிய அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் பஹாய் சமூகம் தனது அளவிலும் வலுவிலும் வளர்ந்து வந்தது, பஹாவுல்லாவின் போதனைகள் படிப்படியாக அந்த நேரத்தில் இருந்த தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களையும் வந்தடைய ஆரம்பித்தது. மஹாத்மா காந்தி பஹாய்களுடனான தனது பல உரையாடல்களுக்கு பிறகு, "பஹாய் சமயம் மனிதகுலத்திற்கு சாந்தம் கொண்டு வருகிறது" என்றார். அதே போல, பல முக்கிய பஹாய்களை சந்தித்த ரபீந்திரநாத் தாகூர் பஹாவுல்லாவை "ஆசியாவில் இருந்து வந்த அண்மைய தூதர்" என்றும், அவரது "செய்தி நாகரீக முன்னேற்றத்திற்கு பெரும் அவசியமானது" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

1960 மற்றும் 70 களில் பஹாவுல்லாவின் செய்தி இந்தியாவின் பல திரளான மக்களுடன் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது, குறிப்பாக கிராமப்புறங்களில். சமயத்தின் போதனைகளுடன் தொடர்பு கொண்ட நொடியே மக்களின் இதயம் சமயத்தின் போதனைகளின் மதிப்பை அங்கீகரித்தனர், மற்றும் பல்லாயிர இந்தியர்கள் தங்களின் வாசுதேவ குடும்பமெனும் நீண்ட கால கனவு பூர்த்தி செய்யப்படுவதை அந்த போதனைகளில் கண்டார்கள். இந்த நவீன கால சமூகத்தின் தேவைகளுடன் அந்த கனவுகளை ஒத்திசைவாக்கும் புதிய உத்வேகத்தை பெற்றார்கள்.

ஆயிரக்கணக்கானோர் தங்களின் சமூகங்கள் சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ள இதனை அமுல்படுத்த முயற்சித்து வருகின்றனர். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உள்ளூர் பஹாய் நிர்வாக அமைப்புகள் தங்களது சமுதாயங்களால் இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது உள்ளூர்களின் தேவைகளுக்கு சேவையாற்ற ஆரம்பித்துள்ளனர். குழந்தைகளின் நன்னெறி கல்வி புதிய அவசரத்தை பெற்று இந்தியா முழுவதுமுள்ள கிராமங்களில் பல கல்வியளிப்பு முயற்சிகள் வெளிப்பட்டு வருகிறது. 1980களில், நூற்றுக்கணக்கான கிராம டுடோரியல் பள்ளிகள், மற்றும் பஹாய் உத்வேகம் பெற்ற பெரிய பள்ளிகள், விவசாயம், தொழிற்கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி, படிப்பறிவு, சுற்றுசூழல், பெண்கள் சக்தியளிப்பு மற்றும் ஆரோக்கியம் போன்ற பல செயல் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.

புதுதில்லியில் கட்டப்பட்ட பஹாய் வழிபாட்டு இல்லம் மனித உள்ளம் மற்றும் சமூகம் ஆகியவற்றிக்கு பஹாவுல்லா எதிர்நோக்கிய தன்மைமாற்றத்திற்கான மாபெரும் அடையாளத்தை வழங்கியது. தாமரை வடிவ கட்டுமானமானது மோசமான சூழ்நிலையில் கூட ஒரு புதிய சிறந்த உலகம் மலரும் என்ற நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. அது ஒற்றுமைக்கான அடையாளமாகவும் உள்ளது. 1986 திறக்கப்பட்டதிலிருந்து, தோராயமாக ஒரு நாளில் அணைத்து மதங்கள், இனம் அல்லது தேசிய பின்னணியிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் பொதுவான படைப்பாளியை வழிப்பட அமைதியாக அதன் கூரைக்கடியில் ஒன்றுக்கூடுகின்றனர்.

இந்தியாவில் பஹாய் சமூகம் அளவிலும் திறனாற்றலிலும் வளர்ந்து, சமூக வாழ்வில் அதிகரித்த பங்கையளிக்க ஆரம்பித்துள்ளனர். தேசிய அளவில், சமுதாய நல்லிணக்கம், பாலின சமத்துவம், கல்வி, ஆண் பெண் சமத்துவம், அரசாட்சி மற்றும் வளர்ச்சி ஆகிய துறைகளை வடிவமைத்து சிந்தனைகளை முன்னேற்றி செல்லும் பஹாய் பங்களிப்பு மிகவும் மதிக்கப்படுகிறது.

இன்று, இந்தியாவில் பஹாய்கள் எண்ணிக்கை இரண்டு மில்லியனை தாண்டியது. அவர்கள், ஒற்றுமை மற்றும் நீதியை பிரதிபலிக்கும், அணைத்து விதமான பாரபட்சங்களை விடுவித்து, ஆண்களும் பெண்களும் தோளோடு தோளாக சரிசமமாக சேவையாற்றும், ஆன்மீக மற்றும் விஞ்ஞான கல்வியை பெரும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இருக்கும், சமூக விசைகளில் இருந்து பாதுகாக்கும் சமுதாயத்தின் பக்தி வாழ்வை கொண்டிருக்கும் சமுதாயங்களை நிர்மாணிக்கும் குடிமகன்களுடன் சேர்ந்து தங்களின் தேசத்திற்கு சேவையாற்ற தங்களை அர்ப்பணித்து வருகிறார்கள்.